மனைவியை வேறு பெண்ணுடன் ஒப்பிட்டு பேசுவது கொடுமை - கேரள உயர் நீதிமன்றம் கருத்து

மனைவியை வேறு பெண்ணுடன் ஒப்பிட்டு பேசுவது கொடுமை - கேரள உயர் நீதிமன்றம் கருத்து
Updated on
1 min read

கொச்சி: மனைவி கேட்ட விவாகரத்தை வழங்கிய குடும்ப நல நீதிமன்றத் தின் தீர்ப்பை எதிர்த்து கணவர் ஒருவர் கேரள உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் அனில் கே. நரேந்திரன், சி.எஸ்.சுதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த 4-ம் தேதி விசாரணைக்கு வந்தது.

விசாரணைக்குப் பின்னர் நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில் கூறியதாவது: இந்த வழக்கில், கணவர் தொடர்ந்து, தனது மனைவியை, தனக்கு சரியான ஜோடி இல்லை என்றும், தனது எதிர் பார்ப்புகளுக்கு ஏற்றபடி இல்லை என்றும் தொடர்ந்து கூறி, மன உளைச்சலை ஏற்படுத்தி யிருக்கிறார். பிற பெண்களுடன் மனைவியை ஒப்பிட்டுப் பேசியுள்ளார்.

இது மனக் கொடுமைக்குச் சமம். இந்த திருமண பந்தம் நீடிக்க வேண்டும் என்பதில் கணவருக்கு உள்ளபடியே நல்ல நோக்கம் இல்லை என்பது விசாரணையில் தெளிவாகத் தெரியவந்துள்ளது. எனவே அவரது மேல் முறையீட்டு மனுவை நிராகரிக்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். மேலும் குடும்ப நல நீதிமன்றம் வழங்கிய விவாகரத்தை எதிர்த்து கணவர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவையும் நீதிபதிகள் தற்போது தள்ளுபடி செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in