ரோஹிங்கியாக்களுக்கு வீடு? - மத்திய உள்துறை மறுப்பு

ரோஹிங்கியாக்களுக்கு வீடு? - மத்திய உள்துறை மறுப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: இந்தியாவில் தஞ்சமடைந்த மியான்மர் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும். டெல்லியை அடுத்த பக்கர்வாலா பகுதியில்
அமைந்துள்ள அரசு குடியிருப்புகளில் அவர்களுக்கு வீடுகள் வழங்கப்படும். அங்கு அவர்களுக்குத் தேவையான அனைத்து
அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும். மதம், இனம், நிறம் என பாகுபாடு பார்க்காமல் அனைத்து அகதிகளுக்கும் சம
மான அளவில் மரியாதையை இந்தியா அளிக்கும். இவ்வாறு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறியுள்ளார்.

ஹர்தீப் சிங் புரிஆனால் இந்தத் தகவலை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று திட்டவட்டமாக மறுத்தது. இந்தியாவில் 18 ஆயிரத் துக்கும் அதிகமான ரோஹிங்கியா முஸ்லிம்கள் தஞ்சமடைந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in