

சுரங்க மோசடி வழக்கில் ஜாமீனில் வெளிவந்துள்ள கர்நாடக பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் மகள் பிராமணிக்கும், ஆந்திராவைச் சேர்ந்த சுரங்க அதிபரின் மகன் ராஜீவ் ரெட்டிக்கும் நவம்பர் 16-ம் தேதி பெங்களூரு அரண்மனையில் திருமணம் நடைபெற உள்ளது.
இந்த திருமணத்துக்கான அழைப்பிதழ் எல்சிடி வடிவில் மிகவும் ஆடம்பரமான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. அழைப் பிதழை திறந்தால் எல்சிடி திரையில் காட்சிகள் விரிகின்றன. சரியாக 2 நிமிடம் 28 வினாடிகளை கொண்ட இந்த வீடியோ, திரைப்பட பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, அவரது மகள் பிராமணி, மணமகன் ராஜீவ் ரெட்டி மற்றும் குடும்பத்தார் தோன்றி வரவேற்கின்றனர்.
இதற்காக ஹைதராபாத்தில் பல லட்ச ரூபாய் செலவில் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத் தப்பட்டுள்ளது. கன்னடம் மற்றும் தெலுங்கில் ஒலிக்கும் வரவேற்பு பாடலில் வாயசைத்து ஜனார்த்தன ரெட்டி விருந்தினர் களை திருமணத்துக்கு வரவேற் கிறார். இதைத் தொடர்ந்து மண மக்கள் ஆடிப்பாடும் டூயட் காட்சி களும் அதில் இடம்பெற்றுள்ளன.
இந்த ஆடம்பர அழைப்பிதழை தயாரிக்க ரூ. 2.25 கோடி செலவு செய்யப்பட்டது. ஒரேயொரு எல்சிடி அழைப்பிதழின் மதிப்பு மட்டும் ரூ. 1500. இந்த திருமணத்துக்காக ஜனார்த்தன ரெட்டி ரூ. 200 கோடிக்கும் அதிகமாக செலவு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜீவ் ரெட்டியுடன் பிராமணி.