ரிலையன்ஸ் மருத்துவமனையை பதறவைத்த மர்ம போன்கால் - முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல்

ரிலையன்ஸ் மருத்துவமனையை பதறவைத்த மர்ம போன்கால் - முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல்
Updated on
1 min read

மும்பை: முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் மருத்துவமனைக்கு நேற்று காலை முதல் தொடர்ந்து எட்டு மர்ம தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. மும்பையில் செயல்பட்டு வரும் அந்த மருத்துவமனைக்கு வந்த மர்ம அழைப்பில் தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் அந்த மர்ம நபர் பல பெயர்களைப் பயன்படுத்தி மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் போலீஸில் புகார் அளித்தனர்.

போலீஸ் விசாரணையில், முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் 56 வயதான விஷ்ணு பௌமிக் என்று அடையாளம் கண்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் அழைப்பாளர் மனநிலை சரியில்லாதவர் என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலை மிரட்டல் சம்பவத்தை அடுத்து அம்பானியின் மருத்துவமனை மற்றும் இல்லத்துக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுவது அவ்வப்போது நடந்துவருகிறது. கடந்த ஆண்டு, அவரின் வீட்டின் முன் ஒரு கார் முழுவதும் ஜெலட்டின் குச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மகாராஷ்டிரா அரசு பாதுகாப்பு வழங்கி வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in