வலைதளத்தில் 5 கோடிக்கும் மேற்பட்ட மூவர்ணக் கொடி செல்ஃபி படங்கள் பதிவேற்றம்: மத்திய அரசு

வலைதளத்தில் 5 கோடிக்கும் மேற்பட்ட மூவர்ணக் கொடி செல்ஃபி படங்கள் பதிவேற்றம்: மத்திய அரசு
Updated on
1 min read

புதுடெல்லி: மகத்தான சாதனையாக இல்லந்தோறும் மூவர்ணக்கொடி வலைதளத்தில் (www.harghartiranga.com) 5 கோடிக்கும் மேற்பட்ட மூவர்ணக் கொடி செல்ஃபி படங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்திய நாடு சுதந்திரத்தின் 76-வது ஆண்டைத் தொடங்கும் இந்த வேளையில், விடுதலையின் அமிர்தப் பெருவிழா என்னும் 75 வார கவுன்ட்-டவுன் மத்திய சுற்றுலா அமைச்சகத்தால் மேற்கொள்ளப்பட்ட இல்லந்தோறும் மூவர்ணக் கொடி இயக்கத்துடன் 2022, ஆகஸ்ட் 15-ஆம் தேதியுடன் முடிவடைந்துள்ளது.

இந்த இயக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி வரை சுமார் 5 கோடி செல்ஃபி படங்கள் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இது இந்திய வரலாற்றில் சிறப்புமிக்க தருணமாகும்.

இந்த சாதனை பற்றி குறிப்பிட்டுள்ள கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, தேசத்தை எப்போதும் முதன்மையானதாக கருதும் கடமை உணர்வு கொண்ட இந்தியர்களின் கூட்டு முயற்சியின் பிரதிபலிப்பு இது என கூறியுள்ளார். அனைவருக்கும் அவர் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in