காஷ்மீரில் ராணுவ முகாமை தகர்க்க சதி: பாக். தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை - எல்லையில் ஊடுருவல் முயற்சியும் முறியடிப்பு

காஷ்மீரில் ராணுவ முகாமை தகர்க்க சதி: பாக். தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை - எல்லையில் ஊடுருவல் முயற்சியும் முறியடிப்பு
Updated on
1 min read

ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டம் ஹண்ட்வாரா பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகள் 3 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். அவர்களிடம் இருந்து வெடிப்பொருட்கள், துப் பாக்கிகள், பாகிஸ்தானில் இருந்து வாங்கி வரப்பட்ட மருந்துகள் ஆகிய வற்றையும் பறிமுதல் செய்தனர்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் நுழைந்து துல்லிய தாக்குதல் மூலம் 7 தீவிரவாத முகாம்களை அழித்த நாள் முதலாக இந்தியாவை பழிவாங்க பாகிஸ்தான் தீவிரவாதிகள் தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஜம்மு மற்றும் பஞ்சாப் மாநில எல்லையொட்டிய பகுதிகளில் பலூன் மற்றும் புறா மூலம் மிரட்டல் விடுக்கும் துண்டுச் சீட்டுகளை அனுப்பி வைத்து எல்லையோர மக்களையும் அச்சுறுத்தி வருகின்றனர்.

இந்தச் சூழலில் ஜம்மு காஷ் மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் நேற்று முன் தினம் அதிகாலை 5 மணியளவில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 3 பேர் பயங்கர ஆயுதங்களுடன் வந்துள்ளனர். ராணுவ முகாமின் கம்பி வேலிகளைக் கடந்து அவர் கள் நுழைய முயற்சிப்பதைக் கண்ட பாதுகாப்புப் படை வீரர்கள் உட னடியாக அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 3 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

இது குறித்து கர்னல் ராஜீவ் சரங் கூறும்போது, ‘‘நமது ராணுவ முகாமின் கம்பி வேலி அருகே மூன்று தீவிரவாதிகளும் சுற்றித் திரிந்து நோட்டம் விட்டப்படி இருந்துள்ளனர். அப்போது பாது காப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்களை நோக்கி அவர்கள் திடீரென துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இதனால் உஷாரடைந்த நமது வீரர்கள் அவர்கள் தப்பிச் செல்லாத வகையில் சுற்றி வளைத்து சுட்டுக் கொன்றனர். கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து நான்கு ரேடியோ செட்கள், துப்பாக்கிகள், வெடிப்பொருட்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களும் உயிர் காக்கும் மருந்துகளும் கைப் பற்றப்பட்டுள்ளன. இவை அனைத் திலும் பாகிஸ்தான் நாட்டின் குறி பொறிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

இந்தச் சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் மேலும் சில தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்பதால் அவர்களைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

ஊடுருவல் முறியடிப்பு

இதற்கிடையே, நவுகம் மற்றும் ராம்பூர் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை கடந்து மூன்று முறை தீவிரவாதிகள் நடத்திய ஊடுருவல் முயற்சியை எல்லைப் பாதுகாப்பு படை யினர் உரிய பதிலடி கொடுத்து முறியடித்துள்ளனர். இதில் 4 தீவிர வாதிகள் உயிரிழந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in