சுதந்திர தினத்தை முன்னிட்டு பெங்களூருவில்: இன்று அரசு பேருந்தில் இலவச பயணம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு பெங்களூருவில்: இன்று அரசு பேருந்தில் இலவச பயணம்
Updated on
1 min read

பெங்களூரு: பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.

நாட்டின் 75-வது சுதந்திர தினம் மற்றும் பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகத்தின் 25-ம் ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு போக்குவரத்து ஊழியர்கள், பொதுமக் களை ஊக்குவிக்க பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதுவரை விபத்தை ஏற்படுத்தாத ஓட்டுநர், பணியில் சிறப்பாக செயல்பட்ட நடத்துநர் உள்ளிட்ட 150 பேருக்கு தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது.ஆகஸ்ட் 15ம் தேதி அதிகாலை 4 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை அரசு போக்குவரத்து கழக (பிஎம்டிசி) பேருந்துகளில் பொதுமக்கள் இலவசமாக பயணிக்கலாம்.

குறிப்பாக பெங்களூருவில் உள்ள சுற்றுலா தலங்கள், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் ஆகியவற்றை சென்று காணலாம். இந்த இலவச பயண வசதி சாதாரண, குளிர்சாதன, சிறப்பு வால்வோ பேருந்துகளுக்கும் பொருந்தும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in