மெட்ரோ ரயிலில் கீழே சிந்திய உணவை கைக்குட்டையால் சுத்தம் செய்த இளைஞர்

மெட்ரோ ரயிலில் கீழே சிந்திய உணவை கைக்குட்டையால் சுத்தம் செய்த இளைஞர்
Updated on
1 min read

புதுடெல்லி; டெல்லியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் பிரஞ்சால் தூபே. இவர் தினமும் டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்து வருகிறார். ஒருநாள் இவர் பயணம் செய்யும்போது அவர் கொண்டு வந்த உணவு ரயில் பெட்டியில் கீழே சிந்திவிட்டது. இதையடுத்து சிறிதும் யோசிக்காத தூபே, தனது கைக்குட்டையைக் கொண்டு அந்த இடத்தை சுத்தம் செய்தார்.

இதைப் பார்த்த சக பயணியான சுபம் வர்மா என்பவர் இதை வீடியோவாகவும், புகைப்படமாகவும் எடுத்து ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இதைப் பார்த்த பலரும் இளைஞர் தூபேவுக்கு பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர்.

மத்திய அரசு பாராட்டு

இந்தப் புகைப்படம் மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து இளைஞர் பிரஞ்சால் தூபேவைப் பாராட்டி மை கவ் இணையதளத்தில் அவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது புகைப்படமும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சுத்தத்தைப் போற்றுவதோடு மட்டுமல்லாமல் அதை காப்பாற்றவும் செய்கிறார் இந்த இளைஞர் என்று பாராட்டையும் மத்திய அரசு பதிவிட்டுள்ளது.

அதேநேரத்தில் இந்த சம்பவம் நடந்தது 2017-ம் ஆண்டும் என்றும், அதை சுபம் வர்மா 2017-ம் ஆண்டிலேயே ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார் என்றும் அந்த புகைப்படம்தான் தற்போது வைரலாகி வருகிறது என்றும் தெரியவந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in