

டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற் கொலை விவகாரத்தில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப் பட்டதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய் துள்ளது.
பொறியாளர் கோகுல்ராஜ் கொலை வழக்கை டிஎஸ்பி விஷ்ணுபிரியா விசாரித்து வந்தார். இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. போலீஸாரின் நெருக்கடி காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டார். எனவே, இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று கோரி விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இம்மனுவை ஏற்றுக் கொண்ட சென்னை உயர் நீதி மன்றம் கடந்த ஜூலை 1-ம் தேதி, விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய் யப்பட்டது. சிபிசிஐடி விசாரணை முடியும் நிலையில் இருப்பதால், இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கூடாது என்று தமிழக அரசு சார்பில் முறையிடப்பட்டது. இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் மதன் பி.லோக்கூர், எஸ்.கே.கோயல் அடங்கிய அமர்வு தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து நேற்று உத்தரவிட்டது.