

ராணுவ தாக்குதல் மூலம் மத்தியில் ஆளும் பாஜக அரசியல் ஆதாயம் தேடுகிறது என்று மார்க்சிஸ்ட் குற்றம் சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக அந்த கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ''ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்துள்ளது. இதன்மூலம் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் அரசியல் ஆதாயம் தேட பாஜக முயற்சிக்கிறது. அந்த மாநில பாஜக தலைவர்கள் ராணுவ தாக்குதலை மையப்படுத்தி பிரச்சாரம் செய்து வருகின்றனர்'' என்று குற்றம்சாட்டியுள்ளார்.
தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஒமர் அப்துல்லா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''ராணுவ தாக்குதலில் அரசியல்கூடாது என்று சிலர் (பாஜக) கூறுகின்றனர். ஆனால் உத்தரப் பிரதேசத்தில் அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.