காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களை மாற்ற கட்சி மேலிடம் திட்டம்

காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களை மாற்ற கட்சி மேலிடம் திட்டம்
Updated on
1 min read

காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களை மாற்ற அக்கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், ஹரியானா முதல்வர் புபீந்தர் சிங் ஹூடா, மகாராஷ்டிரா முதல்வர் பிருதிவராஜ் சவான் அகியோர் கட்சி தலைமையுடன் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளனர்.

புபீந்தர் சிங் ஹூடா, டெல்லியில் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு 30 நிமிடங்கள் நடைபெற்றது. இதேபோல் பிருதிவிராஜ் சவான், சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேலை சந்தித்துப் பேசியுள்ளார். அசாம் மாநில மூத்த அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவும், சோனியா காந்தியை சந்திக்க அனுமதி கோரியுள்ளதாக தெரிகிறது. அசாம் மாநில முதல்வரைத் தான் முதலில் மாற்ற திட்டமிடப்பட்டிருப்பதாக தெரிகிறது.

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததை அடுத்து, கட்சி நிர்வாக அளவில் சீர்திருத்தம் செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in