Last Updated : 14 Oct, 2016 10:20 AM

 

Published : 14 Oct 2016 10:20 AM
Last Updated : 14 Oct 2016 10:20 AM

ராணுவ தாக்குதலுக்கு இந்துத்துவ அடையாளம் ஏன்?- மார்க்சிஸ்ட் கடும் கண்டனம்

ராணுவ தாக்குதலை இந்துத்துவ அடையாளத்துடன் வெளிப் படுத்துவதாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் குற்றம்சாட்டியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ‘பீப்பிள்ஸ் டெமாக்ரஸி’ இதழில் வெளியான கட்டுரையில் இதுதொடர்பாக கூறப்பட்டுள்ள தாவது:

அண்மையில் லக்னோவில் பிரதமர் மோடி பேசிய தசரா உரை, உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலுடன் தொடர்புடையது. அரசியல் ரீதியான தனது கருத்துகளை மக்களுக்கு தெரிவிக்க, அவர் மதம் சார்ந்த திருவிழாக்களைப் பயன்படுத்துகிறார்.

‘ஜெய் ராம்’ என்றபடி தனது உரையை தொடங்கி, தீவிர வாதத்தை ஒழிப்பது குறித்து பேசுகிறார். அதற்கும் ராமா யணத்தைத் துணைக்கு எடுத்துக் கொண்டு, மேற்கோள் காட்டிப் பேசுகிறார். ஆக, உத்தரப் பிரதேச தேர்தல் களம், மதமும், அரசியலும் கலந்துதான் இருக்கும் என்பது இதன்மூலம் தெளிவாகிறது.

அதேபோல், அண்மையில் நடந்த ராணுவத் தாக்குதலை விவரிக்கும் போது, பாஜகவினர் மத ரீதியான உதாரணங்களை எடுத்துக்காட்டியே பேசுகின்றனர். ராணுவ வீரர்களின் பங்களிப்பை இந்துத்துவ அடையாளங்களுடன் ஒப்பிட்டு அவர்கள் விளக்கு கின்றனர்.

பாஜக-ஆர்எஸ்எஸ் ஆட்சியின் கீழ், நாட்டில் உள்ள ராணுவப் படைகள் உட்பட எந்தவொரு அமைப்பும், இந்துத்துவ கட்டுப் பாட்டுக்கு ஆட்படுவதில் இருந்து தம்மை தற்காத்துக்கொள்ள இயலவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது. ஒவ்வொரு குடிமகனும் இதனை, மிகத் தீவிர பிரச்சினையாக கருத வேண்டும். நாட்டின் மதச்சார்பற்ற ஜனநாயக மாண்பை பாதுகாக்க விரும்பும் ஒவ்வொரு குடிமகனும் இவ்விஷயத்தில் குரல் கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x