

ரசாயன அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்து வதற்கு பதிலாக பசுவின் கோமியம் மற்றும் பால் பொருட்களில் தயாரிக்கப்பட்ட பொருட்களை பெண்கள் பயன்படுத்தினால் எகிப்து ராணி கிளியோபட்ராவை போல் அழகாக முடியும் என குஜராத் பசு பாதுகாப்பு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து பசு பாது காப்பு வாரியம் தனது அதிகார பூர்வ இணையதளத்தில் வெளி யிட்டுள்ள அறிவுறுத்தலில் கூறியிருப்பதாவது:
இயற்கையான முறையில் தோல் மினு மினுப்புக்கு பஞ்சகவ்யம் (பசு கோமியம்) தான் உலகிலேயே மிகச் சிறந்த மருந்தாக உள்ளது. முகப் பரு மற்றும் கூந்தல் சார்ந்த பிரச்சினைகளுக்கும் பஞ்சகவ்யம் சிறந்த தீர்வு அளிக்கிறது. சோப்பு, கிரீம்கள் மற்றும் பவுடர் போன்ற ரசாயன கலவையில் தயாரிக்கப்படும் பொருட்களால் தோலின் இயற்கை யான அழகு மங்கிவிடும்.
ஆனால் பஞ்சகவ்யம் சருமத்தை பாதுகாத்து பொலிவூட்டும். பசுவின் பால், நெய், கோமியம் மற்றும் சாணம் ஆகியவற்றை உடலில் பூசும் போதும் தோலின் நிறம் ஜொலிக்கும்.
முகத்தில் கருவட்டங்கள், புள்ளிகள், பருக்களை நீக்கும் ஆற்றல் கோமி யத்துக்கு இருக்கிறது.
நீடித்த முகப் பொலிவுக்கும் தோலின் மினு மினுப்புக் கும் பஞ்ச கவ்ய சிகிச்சை முறை உரிய பலன் அளிக்கும்.உலகிலேயே எகிப்திய ராணி கிளியோபட்ரா தான் அழகு என்று கூறுகின்றனர். அவர் குளிப்பதற்காக பாலைத் தான் பயன்படுத்தினார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சரும பிரச்சினைகளுக்கு மட்டுமின்றி, புற்றுநோய், ரத்தசோகை, ஆஸ்துமா, முடக்குவாதம், எய்ட்ஸ் உள்ளிட்ட 108 வகையான நோய்களுக்கும் பசு கோமியம் அருமருந்தாக உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவுக்கும் பஞ்சகவ்யம் இயற்கை கரைசல்
தமிழகத்திலும் தரமான பஞ்சகவ்ய மூலப் பொருட்களை கொண்டு அழகு சாதனப் பொருட்கள், வேளாண் உரங்கள், நோய் எதிர்ப்பு சக்தி பொருட்கள் ஆகியவற்றை சென்னையை சேர்ந்தச் ‘ஸ்ரீகோதான் பயோசால் பிரைவெட் லிமிடெட்’ என்ற நிறுவனம் தயாரித்து வழங்கி வருகிறது. குறிப்பாக ரசாயன ஊசிகளால் பிராய்லர் கோழிகளுக்கு ஏற்படும் பின்விளைவுகளை தடுக்க பஞ்சகவ்ய மூலப்பொருட்களை கொண்ட இயற்கை கரைசலை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் நாட்டுக்கோழிக்கு ஈடாக பிராய்லர் கோழியின் இறைச்சியும் சுவையாகவும், உடல் நலத்துக்கு ஏற்றதாகவும் இருக்கும் என இந்நிறுவனத்தின் இயக்குனர் எஸ்.சங்கர ராமன் தெரிவித்துள்ளார்.