

தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிப்போர் தப்ப முடியாது, அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் நேற்று நடந்த தசரா விழாவில் பிரதமர் மோடி பங்கேற் றார். அப்போது அவர் பேசியதா வது:
தீவிரவாதம் ஒரு வைரஸ் கிருமி போன்றது. அது சமுதாயத்தில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. உலகின் பெரும்பாலான நாடுகள் தீவிரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளன.
தீவிரவாதம் மனித குலத்தின் எதிரி. தீவிரவாதத்துக்கு எல்லைகள் கிடையாது. தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிப்போர் தப்ப முடி யாது. அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். நாம் அனைவருமே பகவான் ராமராக முடியாது. எனினும் தீவிரவாதத்தை தடுக்க ஜடாயுவாக செயல்பட முடியும். தீவிரவாதத்துக்கு எதிராக, பெண்களின் பாதுகாப்புக்காக முதலில் போராடியவர் ஜடாயு. அவரைப் போன்று நாம் தீவிரவாதத்தை தடுக்க போராட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் தசரா விழாவின்போது நாம் ராவணனை எரிக்கிறோம். இந்த நேரத்தில் ஊழல், மன அழுக்கு, கெட்ட குணங்கள், நோய், கல்வி யறிவின்மை, மூடநம்பிக்கை களையும் எரிக்க வேண்டும். நாம் ராவணனை எரிக்கும் அதேநேரம் சீதைக்கு ஏற்பட்ட அநீதிகளையும் நினைவில் கொள்ள வேண்டும். இந்த நாள் பெண்குழந்தைகளின் தினம். நமது நாட்டில் பாலின பாகுபாட்டை ஒழிக்க போராட வேண்டும். ஆண் குழந்தைகளுக்கு நிகராக பெண் குழந்தைகளும் பாவிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 7 தீவிரவாத முகாம் களை இந்திய ராணுவ வீரர்கள் அண்மையில் அழித்தனர். லக்னோ தசரா விழாவில் பிரதமர் மோடி முதல்முறையாக இந்திய ராணுவ தாக்குதலை மறைமுகமாக சுட்டிக் காட்டிப் பேசியுள்ளார்.