Published : 04 Oct 2016 10:43 AM
Last Updated : 04 Oct 2016 10:43 AM

கொடியேற்றத்துடன் தொடங்கியது திருப்பதி பிரம்மோற்சவம்

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பிரம்மோற்சவ விழாவின் தொடக்கமாக, திருப்பதி ஏழுமலை யான் கோயில் வளாகத்தில் உள்ள தங்க கொடி கம்பத்தில், ஆகம விதிகளின்படி கருட சின்னம் பொறித்த கொடியை அர்ச்சகர்கள் கொடி கம்பத்தில் ஏற்றினர்.

இந்நிகழ்ச்சியின்போது, உற் சவர்களான தேவி, பூதேவி, மலையப்ப சுவாமிகள் முன்னிலை யில் வேதபண்டிதர்கள் வேதங்கள் முழங்க, மேள தாளங்கள் இசைக் கப்பட்டன. இதில் பெரிய, சின்ன ஜீயர் சுவாமிகள், தேவஸ்தான அதிகாரிகள், அறங்காவலர் குழுவினர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

இதைத் தொடர்ந்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, திருமலையில் உள்ள பேடி ஆஞ்சநேயர் கோயில் அருகி லிருந்து பட்டு வஸ்திரங்களை சாஸ்திரப்படி தலையில் சுமந்து வந்து ஜீயர் சுவாமிகளிடம் வழங் கினார். இந்த பட்டு வஸ்திரங்கள் மூலவருக்கு சாத்தப்பட்டன.

பின்னர் இரவில் ஆதிசேஷனாக கருதப்படும் பெரிய சேஷ வாகனத்தில் உற்சவர்களான தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி எழுந்தருளி 4 மாட வீதிகளிலும் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நடனக் கலைஞர்களின் ஒயிலாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

திருச்சியில் உள்ள ராமானுஜ தாசரி அமைப்பினர் கடந்த 60 ஆண்டுகளாக திருமலை பிரம்மோற்சவ விழாவில் கலந்து கொண்டு வருகின்றனர். இந்த ஆண்டுக்கான விழாவிலும் அவர்கள் கலந்து கொள்வதற்காக நேற்று திருமலை வந்தனர். இந்நிலையில் வாகன சேவைக்கு முன்பாக ராமானுஜ தாசரி அமைப்பு சார்பில் வழக்கமாக நடத்தும் சாகச நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக் கப்பட்டதாக கூறப்படுகிறது. இதைக் கண்டித்து அவர்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த தேவஸ்தான அதிகாரிகள், சாகச நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதியளித்தனர்.

மலர்க் கண்காட்சி

பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருமலையில் உள்ள பாபவிநாசம் செல்லும் சாலையில் மலர், பழம் மற்றும் புகைப்படக் கண்காட்சி நடக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x