

இராக்கில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், அங்கு சிக்கியுள்ள இந்திய செவிலி யர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என மத்திய அரசு உறுதியளித்துள்ளது.
அதேசமயம் அங்கிருந்து இந்தியாவுக்கு திரும்ப அழைத்து வருவதற்கான சூழல் தற்போது சாதகமாக இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராக்கில் சன்னி முஸ்லிம் கிளர்ச்சியாளர்கள் ராணுவத்தை எதிர்த்து ஆயுதமேந்திப் போராடி வருகின்றனர். பல்வேறு முக்கிய நகரங்களை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர். திக்ரித் நகரம் கிளர்ச்சியாளர்களின் கட்டுப் பாட்டுக்குள் வந்துள்ளது.
இதனால், அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. திக்ரித் நகரிலுள்ள இந்திய செவி லியர்களை மீட்க வேண்டும் என கேரளம் உள்பட பல்வேறு மாநிலங்கள் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளன.
இதனிடையே, இராக்கிலுள்ள இந்திய செவிலியர்கள் நிலை தொடர்பாக, இராக் அரசுடன் பேசி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அங்குள்ள இந்தியர்களுக்கு இயன்ற அளவு உதவி செய்யப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்திய அரசின் வேண்டு கோளின்பேரில், சர்வதேச செம் பிறைச் சங்கத்தின் குழு திக்ரித் நகரிலுள்ள 46 இந்திய செவி லியர்களிடம் தொடர்பு கொண்டு அவர்களின் பாதுகாப்பு நிலை குறித்து கேட்டறிந்தது. பின்னர், அவர்கள் நலமாக இருப்பதை இந்தியாவிடம் தெரிவித்துள்ளது.
இராக் அரசு, இராக்கிலுள்ள ஐ.நா. உதவித் திட்டம் ஆகியவற்று டனும் தொடர்பிலுள்ள இந்தியா, இராக்கிலுள்ள அனைத்து இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரியுள்ளது.
“இராக்கிலுள்ள இந்தியர்களின் பாதுகாப்பு மிகவும் கவலைக்குரிய விஷயம். அவர்களை திரும்ப அழைத்துவருவதற்கு உகந்த சூழல் தற்போது இல்லை. அங்கு சாலைகள் பாதுகாப்பானதாக இல்லை” என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இராக்கிலுள்ள இந்தியர்கள், பாதுகாப்பு அச்சுறுத்தல் காரண மாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என கடந்த ஞாயிற்றுக் கிழமை தெரிவித்திருந்தது. இராக்குக்கு இந்தி யர்கள் யாரும் பயணம் செய்ய வேண்டாம் எனவும் அறிவுறுத் தப்பட்டுள்ளது.
தொலைபேசி உதவி
பாக்தாத்திலுள்ள இந்தியத் தூதரகம், அங்குள்ள இந்தியர் களுக்காக 24 மணி நேர தொலைபேசி உதவி எண்ணை அறிவித்துள்ளது.
இராக்கில் தற்போது 10 ஆயிரத்துக்கும் அதிகமான இந்தி யர்கள் இருப்பதாகக் கணக்கிடப் பட்டுள்ளது.
கேரளம் உறுதி
செவ்வாய்க்கிழமை நடை பெற்ற கேரள சட்டப்பேரவை யில் இதுதொடர்பாக விவாதிக்கப் பட்டது. வெளிநாடு வாழ் கேரளத் தவர் விவகாரத்துறை அமைச்சர் கே.சி.ஜோசப் கூறுகையில், “திக்ரித் நகரிலுள்ள 44 கேரள செவிலியர்கள் பாதுகாப்பாக இருப்பதாக அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது. கேரள செவிலி யர்கள் பணிபுரியும் மருத்துவமனை யிலிருந்து அருகிலுள்ள விமான நிலையம் செல்லும் சாலைகளில் வெடிகுண்டுகள் அதிகம் வெடிப் பதால், அது பாதுகாப் பற்றதாக உள்ளது. ஆகவே, தற்போது நாடு திரும்புவதற்கு உகந்த சூழல் அIங்கு இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
கேரளத்தில் குறைந்த சம்பளம், பணிப்பாதுகாப்பு இல்லாதது ஆகியவற்றின் காரண மாக, கேரள செவிலியர்கள் வெளிநாடுகளுக்குச் செல் கின்றனர்.