பழங்குடியின மாணவர்கள் போராட்டம்: மணிப்பூரில் இணைய சேவை துண்டிப்பு

பழங்குடியின மாணவர்கள் போராட்டம்: மணிப்பூரில் இணைய சேவை துண்டிப்பு
Updated on
1 min read

இம்ப்பால்: மணிப்பூரில் உள்ள பழங்குடியின பகுதிகளுக்கு தன்னாட்சி வழங்க மணிப்பூர் (மலைப் பகுதிகள்) தன்னாட்சி மாவட்ட கவுன்சில் மசோதா கடந்த ஆண்டு தயாரிக்கப்பட்டது. இது திருத்தங்களுடன் சமீபத்தில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

இது பழங்குடியின மக்களின் கோரிக்கைகளின்படி இல்லை. இதனால் புதிய மசோதாவை தாக்கல் செய்ய வேண்டும் என்று கோரி மணிப்பூர் பழங்குடியின மாணவர் சங்கத்தினர் கடந்த சில நாட்களாக போாரட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் நேற்று முன்தினம் கண்டன பேரணி நடத்திய போது, அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது நடந்த மோதலில் 30 மாணவர்கள் காயம் அடைந்தனர்.

இது தொடர்பாக 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டு, 15 நாட்களுக்கு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களை விடுவிக்க கோரி மாணவர்கள் நெடுஞ்சாலைகளில் காலவரையற்ற பந்த் அறிவித்துள்ளனர். இந்நிலையில் விஷ்ணுபூர் மாவட்டத்தில் வாகனம் ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. கலவரங்கள் பரவுவதாக விஷ்ணுபூர் மாவட்ட எஸ்.பி. அறித்த அறிக்கை அடிப்படையில் மணிப்பூரில், செல்போன் இணைய சேவையை 5 நாட்களுக்கு நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in