

கான்பூர்: உத்தர பிரதேசத்தில் முதல்வர் ஆதித்ய நாத் அமைச்சரவையில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சராக ராகேஷ் சச்சன் (57) பதவி வகிக்கிறார்.
கடந்த 1991-ம் ஆண்டில் ராகேஷ்சச்சன் வீட்டில் இருந்து உரிமம்பெறாத துப்பாக்கி கைப்பற்றப்பட்டது. இதுதொடர் பாக கடந்த 30ஆண்டுகளுக்கும் மேலாக வழக்குவிசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் கான்பூர் கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நேற்று முன்தினம் வழங்கிய தீர்ப்பில், அமைச்சர் ராகேஷ் சச்சன் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக் கான தண்டனை விவரம் விரை வில் வெளியிடப்பட உள்ளது. தீர்ப்பு அறிவிக்கப்பட்ட உடன் அமைச்சர் ராகேஷ் சச்சன் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப் படுகிறது. அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை.
கட்சிகள் மாறியவர்
ராகேஷ் சச்சன் முதலில் சமாஜ்வாதி கட்சியில் இருந்து எம்எல்ஏ., எம்.பி.யாக பதவி வகித்தார். கடந்த 2019-ம் ஆண்டில் காங்கிரஸில் இணைந்தார். கடந்த 2022-ல் பாஜகவில் இணைந்து எம்எல்ஏ.வானார். தற்போது முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.