Published : 07 Aug 2022 05:41 AM
Last Updated : 07 Aug 2022 05:41 AM

கருக்கலைப்புச் சட்டத்தின் கீழ் திருமணமாகாத பெண்ணுக்கும் உரிமை வழங்க வேண்டும் - உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

புதுடெல்லி: டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் ஒருமித்த சம்மதத்துடன் இருந்த உறவின் பேரில் கர்ப்பமடைந்துள்ளார். அவர் கர்ப்பத்தைக் கலைக்க அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். திருமணமாகாதவர் என்ற காரணத்தை சுட்டிக் காட்டி அவருக்கு கருக்கலைப்பு செய்ய மருத்துவர்கள் மறுத்துவிட்டனர். கருவை கலைக்க உயர் நீதிமன்றமும் அனுமதி மறுத்துவிட்டது.

இதுதொடர்பான மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, திருமணமாகாத பெண்ணுக்கும் கருக்கலைப்பு உரிமை உண்டு என்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.

இதுதொடர்பாக நேற்று முன் தினம் நீதிபதிகள் கூறும்போது, “ஒரு பெண்ணின் இனப்பெருக்கத் தேர்வு உரிமை என்பது அரசியலமைப்பு சட்டத்தின் 21வது பிரிவின் கீழ் அவரது தனிப்பட்ட உரிமையாகும். விவாகரத்து பெற்றவர்கள், கணவனை இழந்தவர்கள் மற்றும் திருமணமாகாத பெண்களும் தங்கள் 24 வார கருவைக் கலைக்க அனுமதிக்கும் விதத்தில் சட்டம் உருவாக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x