Published : 07 Aug 2022 05:50 AM
Last Updated : 07 Aug 2022 05:50 AM
புதுடெல்லி: தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பாகிஸ்தானை சேர்ந்த சிறுபான்மையின மருத்துவர்களில் கடந்த 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவுக்கு வந்து குடியுரிமை பெற்றவர்கள் இந்தியாவில் நிரந்தரமாக மருத்துவர்களாக பணியாற்ற அனுமதி வழங்கப்படும்.
பாகிஸ்தானில் மருத்துவப் படிப்புக்கான சான்றிதழ், பாகிஸ் தானில் மருத்துவர்களாக பணி யாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். இந்த தகுதி உடையோர் செப்டம்பர் 5-ம் தேதிக்குள் தேசிய மருத்துவ ஆணையத்தின் இணையம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT