Published : 22 Jun 2014 10:48 AM
Last Updated : 22 Jun 2014 10:48 AM

முதல்வர்களை மாற்ற காங்கிரஸ் ஆலோசனை: சோனியாவுடன் பூபிந்தர் சிங் ஹூடா, சவாண் சந்திப்பு

சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, காங்கிரஸ் ஆளும் மாநி லங்களின் முதல்வர்களை மாற் றுவது குறித்து கட்சித் தலைமை ஆலோசித்து வருகிறது. இது தொடர்பாக, ஹரியாணா முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது வீட்டில் சனிக்கிழமை சந்தித் துப் பேசினார். சுமார் அரை மணி நேரம் இந்த சந்திப்பு நீடித்தது.

இதற்கு முந்தைய நாள் இரவு சோனியாவின் அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினரான அகமது பட்டேல் மற்றும் கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி ஆகியோரை மகராஷ்டிரா முதல் வர் பிரிதிவிராஜ் சவாண் சந்தித்துப் பேசினார்.

அசாம் முதல்வர் தருண் கோகாயும் சோனியாவை விரை வில் சந்திக்க இருப்பதாகக் கூறப் படுகிறது. இதன்மூலம், காங்கிரஸ் ஆளும் முதல்வர்கள் கூண்டோடு மாற்றம் செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியில் மக்களைவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் தலைவர்கள், முதல் வர்களை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் குவிந்து வரு கின்றன. இதனால் உபியில் மட்டும் நிர்வாகிகள் கூண் டோடு கலைக்கப்பட்டனர். இதை யடுத்து, முதல்வர்கள் மாற்றத் தில் காங்கிரஸ் இறங்கியிருப் பதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து 'தி இந்து'விடம் காங்கிரஸ் நிர்வாகிகள் வட்டாரம் கூறுகையில், ‘‘ஒரே நேரத்தில் அனைத்து மாநிலங்களிலும் நட வடிக்கை எடுத்தால் கிளம்பும் எதிர்ப்பை கட்சித் தலைமையால் சமாளிக்க முடியாது. எனவே, மாநிலங்களின் நிர்வாகிகள் மாற்றம் படிப்படியாகத்தான் இருக் கும். சில மாநிலங்களில் சட்ட சபை தேர்தல் வருவதால் அதன் முதல்வர்களை மட்டும் உடனடி யாக மாற்ற சோனியா முடிவு எடுத்துள்ளார்’’ எனத் தெரிவித்தனர்.

ஹரியாணாவில் வரும் அக்டோபரிலும் மகாராஷ்டிராவில் டிசம்பரிலும் அசாமில் 2016-லும் சட்டசபை தேர்தல் வர உள்ளது. இந்த மாநிலங்களில் மக்க ளவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததால், சட்டசபை தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் முனைப்புடன் செயல்பட்டு வரு கிறது.

மகாராஷ்டிராவின் 48 மக்க ளவைத் தொகுதிகளில் வெறும் 2 இடங்களில் மட்டுமே காங் கிரஸ் வெற்றி பெற்றது. அதன் கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரஸுக்கு 4 இடங்கள் கிடைத் தன. அசாமின் 14-ல் காங்கிரஸ் 3-ல் மட்டும் வென்றது. ஹரியாணாவின் 10-ல், முதல்வரின் மகன் தீபேந்தர் ஹூடாவால் மட்டுமே வெல்ல முடிந்தது.

பிரிதிவிராஜ் சவாண் சந்திப் புக்குப் பின்னர், கூட்டணிக் கட்சி யான தேசியவாத காங்கிரஸ் தலை வர் சரத் பவாரிடமும் காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை நடத்தி னர். இதில் சட்டசபை தேர்த லுக்கான தொகுதி பங்கீடு குறித் தும் பேச்சுவார்த்தை நடந்ததாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x