

உத்தரப் பிரதேசம், பதான் மாவட்ட சிறுமிகள் பலாத்கார வழக்கு விரைவில் சிபிஐ-க்கு மாற்றப்பட உள்ளது. பதான் மாவட்டம், கத்ரா சதாத்கன்ஞ் கிராமத்தைச் சேர்ந்த 2 சிறுமிகளை அண்மையில் ஒரு கும்பல் பலாத்காரம் செய்து கொலை செய்தது.
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கு குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரப் பிரதேச அரசு பரிந்துரைத்தது. இவ்வழக்கை விசாரிக்க சிபிஐ அமைப்பும் விருப்பம் தெரிவித்துள்ளது. மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் ஒப்புதல் கிடைத் தவுடன் சிபிஐ-க்கு வழக்கு மாற்றப்பட உள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சகோதரர்களான பப்பு யாதவ், அவதேஷ் யாதவ் மற்றும் யுர்வேஷ் யாதவ், போலீஸ்காரர்கள் சத்ரபால் யாதவ், சர்வேஷ் யாதவ் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 பேர் தலைமறைவாக உள்ளனர்.
கடந்த மே 27-ம் தேதி சதாத்கன்ஞ் கிராமத்தைச் சேர்ந்த 14, 15 வயது சிறுமிகள் காணாமல் போயினர். இருவரும் அங்குள்ள மரத்தில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கினர். போலீஸ் விசாரணையில் அவர்கள் பலாத்காரம் செய்யப் பட்டு கொலை செய்யப் பட்டது தெரியவந்தது.