தகவல் தொழில்நுட்ப தலைநகரமாகிறது திருப்பதி?

தகவல் தொழில்நுட்ப தலைநகரமாகிறது திருப்பதி?
Updated on
1 min read

ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், சீமாந்திராவிற்கு புதிய தலைநகரத்தை உருவாக்குவது உள்பட பல்வேறு சவால்கள் காத்திருக்கின்றன.

தகவல் தொழில்நுட்ப நிறு வனங்கள் அதிகம் உள்ள ஹைதராபாத்தைப் போன்று சீமாந்திராவின் தகவல் தொழில் நுட்ப தலைநகராக திருப்பதி உருவாவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

சீமாந்திராவின் புதிய தலை நகரத்தை உருவாக்குவது தொடர் பான ஆய்வுப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விஜயவாடா அல்லது விஜயவாடா-குண்டூர் இடையே புதிய தலைநகரம் அமையலாம் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். அதே சமயம் தெலங்கானாவின் ஹைதரா பாத்தைப் போன்று சீமாந்திரா விற்கு தகவல் தொழில்நுட்ப தலைநகரமாக சித்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பதி அமையும் என தெரிகிறது.

திருப்பதி நகரம், சென்னை-பெங்களூரு இடையே அமைந்துள்ளது. இதனால், தமிழகம், கர்நாடக மாநிலங்களில் உள்ள மிகப் பெரிய நிறுவனங்களை ஈர்க்க முடியும்.

மேலும், திருப்பதியில் 9 தலைசிறந்த பல்கலைக்கழகங் கள் உள்ளன. இந்த பல் கலைக்கழகங்கள் மூலம் ஆண்டுதோறும், நூற்றுக் கணக்கான படித்த இளைஞர்கள் வெளியே வருகின்றனர். மேலும் காளஹஸ்தியை அடுத்துள்ள தடா அருகே, பெப்ஸி, இஜுசு மோட்டார்ஸ், கேட்பரி போன்ற புகழ் பெற்ற நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளை தொடங்கி உள்ளன. இதில் தற்போது சுமார் 18000 பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

சீமாந்திராவின் முதல்வராக விரைவில் பதவி ஏற்க உள்ள சந்திரபாபு நாயுடு, தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சியில் அதிக ஈடுபாடு உள்ளவர்.

எனவே, இவரது சொந்த மாவட்டமான சித்தூர் மாவட்டத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்து செல்வார் என தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் எதிர்பார்த்து உள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in