

திருமலையில் கருட சேவையை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த நிலையில், போதிய இடவசதி இல்லாத காரணத்தினால் மாட வீதிகளில் பக்தர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் அனு மதி மறுக்கப்பட்டது. இதைக் கண்டித்து பலர் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருமலை திருப்பதி ஏழுமலை யான் கோயிலில் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. 5-ம் நாளான நேற்று முக்கிய நிகழ்வான கருடசேவை நடந்தது. இதைக் காண நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக் கான பக்தர்கள் திருமலையில் குவிந்தனர்.
இதனால் காலை முதலே மாட வீதிகளில் கட்டுக் கடங்காத கூட்டம் அலைமோதியது. ஒரு கட்டத்தில் மாடவீதிகளில் இருந்த பார்வையாளர்கள் மாடம் நிரம்பி வழிந்ததால், மேற்கொண்டு அப்பகுதிக்கு பக்தர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.
மேலும் மாட வீதியில் அமர்ந்திருந்த பக்தர்களும் அங்கிருந்து வெளியேறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், உணவு, குடிநீரின்றி பக்தர்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.
செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களும் அவர்கள் தங்கியிருந்த ராம்பகீஜா விடுதி யிலேயே தடுத்து நிறுத்தப்பட் டனர். அந்த விடுதிக்கும் போலீ ஸார் பூட்டு போட்டனர். இதனால் பத்திரிகையாளர்களுக்கும், போலீ ஸாருக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது.
பின்னர் தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரியிடம் முறையிட்ட பிறகே பத்திரிகையாளர்கள் மாட வீதிக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இதற்கிடையே நேற்று காலை மலையப்ப சுவாமி மோகினி அவதாரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.