Published : 03 Aug 2022 05:17 AM
Last Updated : 03 Aug 2022 05:17 AM

திருப்பதி கோயில் உண்டியலில் ஒரே நாளில் ரூ.5 கோடி காணிக்கை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில், விடுமுறை, விசேஷ நாட்கள் என்றில்லாமல் அனைத்து நாட்களிலும் கூட்டம் அலை மோதுகிறது. தினமும் சராசரியாக ரூ.4 கோடியை பக்தர்கள் உண்டியலில் செலுத்தி வருகின்றனர். சில நாட்களில் இது ரூ.5 கோடியை கடந்துவிடுகிறது. கடந்த ஜுலை மாதத்தில் மட்டும் 6 முறை ரூ.5 கோடிக்கும் அதிகமாக உண்டியல் வசூல் வந்தது. ஜூலையில் மட்டும் உண்டியல் மூலம் ரூ.139 கோடி வருவாய் பதிவானது.

இந்நிலையில், இந்த மாதத்தின் முதல் நாளே ஏழுமலையானின் உண்டியல் வருவாய் ரூ.5 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது. 1-ம் தேதியான திங்கட்கிழமையன்று ஆடிப்பூரம் கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் திருப்பதி ஏழுமலையானை 71,450 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதில் 31,320 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். தற்போது திருமலையில் பக்தர்கள் அதிகமாக இருப்பதால், நேற்று 8 மணி நேரம் வரை இலவச தரிசன வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சுவாமியை தரிசித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x