Published : 03 Aug 2022 06:04 AM
Last Updated : 03 Aug 2022 06:04 AM
புதுடெல்லி: இந்தியாவில் முதன்முதலாக கேரளாவைச் சேர்ந்த ஒருவருக்கு கடந்த ஜூலை 14-ம் தேதி குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டது. இவரைத் தவிர கேரளாவில் மேலும் மூவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கடந்த 27-ம் தேதி கேரளா திரும்பிய 30 வயது நபருக்கு நேற்று குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் கேரளாவில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
டெல்லியில் ஏற்கெனவே 2 பேருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று 35 வயது வெளிநாட்டவருக்கு இத்தொற்று கண்டறியப்பட்டது. இதனால் டெல்லியில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் இதுவரை 8 பேருக்கு இத்தொற்று ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT