பாக். ஆதரவாக பேசிய சல்மான் படங்களை தடை செய்வோம்: ராஜ் தாக்ரே எச்சரிக்கை

பாக். ஆதரவாக பேசிய சல்மான் படங்களை தடை செய்வோம்: ராஜ் தாக்ரே எச்சரிக்கை
Updated on
1 min read

பாகிஸ்தான் கலைஞர்களுக்கு ஆதரவாகப் பேசினால் சல்மான் கான் படங்கள் இந்தியாவில் தடை செய்யப்படும் என ராஜ்தாக்ரே கூறியுள்ளார்.

முன்னதாக வெள்ளிக்கிழமை டெல்லியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சல்மான் கான் "பாகிஸ்தான் நடிகர்களை தீவிரவாதிகளைப் போல் நடத்த வேண்டாம். தீவிரவாதத்தையும், கலையையும் இணைக்க வேண்டாம்" என்று குறிப்பிட்டிருந்தார்

இது குறித்து கருத்து தெரிவித்த மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா அமைப்பின் தலைவர் ராஜ்தாக்ரே, "நமது பாதுகாப்புக்குகாக நம்முடைய ராணுவ வீர்ர்கள் எல்லையில் எதிரிகளிடம் சண்டையிட்டு வருகின்றனர். அவர்கள் ஆயுதத்தை கீழே போட்டால் என்ன நடக்கும். யார் எல்லையில் நம்மை பாதுகாப்பார்கள்? சல்மான் கானா? பாலிவுட் திரையுலகமா?

சல்மான் கான் போன்ற கலைஞர்கள் முதலில் நாட்டை நினைத்துப் பார்க்க வேண்டும். இங்கே நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன.

தமிழ்நாடு-கர்நாடகா காவிரி பிரச்சினையினால் இரு மாநிலங்களும் சண்டையிட்டபோது ஏன் இந்த சல்மான் கான் போன்ற நடிகர்கள் வாய் திறக்கவில்லை. பாகிஸ்தான் கலைஞர்களுக்கு ஆதரவாகப் பேசினால் சல்மான் கான் படங்கள் இந்தியாவில் தடை செய்யப்படும்

இந்தியாவில் 100 கோடி பேர் இருக்கிறார்கள் இவர்களிடம் இல்லாத திறனையா பாகிஸ்தானிலிருந்து கொண்டு வரப் போகிறார்கள். முதலில் தாய்நாட்டை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்". என்றார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in