டிஹெச்எஃப்எல் பண மோசடி வழக்கு: தொழிலதிபர் வீட்டில் இருந்து ஹெலிகாப்டரை கைப்பற்றிய சிபிஐ

டிஹெச்எஃப்எல் பண மோசடி வழக்கு: தொழிலதிபர் வீட்டில் இருந்து ஹெலிகாப்டரை கைப்பற்றிய சிபிஐ
Updated on
1 min read

புனே: திவான் ஹவுசிங் பைனான்ஸ் நிறு வனம் (டிஹெச்எஃப்எல்) மீதான பண மோசடி வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட அவினாஷ் போசலேவுக்கு சொந்தமான இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஹெலிகாப்டரை சிபிஐ கைப்பற்றியுள்ளது.

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா உட்பட 17 வங்கிகளிடமிருந்து ரூ.34,615 கடன் பெற்று மோசடி செய்துள்ளதாக வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனமான டிஹெச்எஃப்எல் மீதும் அதன் இயக்குநர்கள் கபில் வாத்வான் மற்றும் தீரஜ் வாத்வான் மீதும் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இம்மோசடியில் பங்கு வகித்ததாக ரியல் எஸ்டேட் நிறுவனமான ஏபிஐஎல் இன்ஃப்ராபுராஜெக்ட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் அவி னாஷ் போசலே மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தற்போது இம்மூவரும் சிறையில் உள்ளனர்.

இந்நிலையில், புனேயில் அவினாஷ் போசலேவுக்கு சொந்தமான இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஹெலிகாப்டரை சிபிஐ கைப்பற்றியுள்ளது.

இந்தக் ஹெலிகாப்டரை கபில்வாத் வான், தீரஜ் வாத்வான் மற்றும் அவினாஷ் போசலே ஆகிய மூவரும், வங்கிகளிடமிருந்து பெற்ற கடன் பணத்தில் வாங்கி உள்ளனர் என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in