

ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரத்தில் உள்ள 4 மாடி கட்டிடத்தில் பிரபல தனியார் மருத்துவமனை செயல்படுகிறது. அங்குள்ள நீரிழிவு மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் நேற்று முன்தினம் இரவு திடீரென தீ விபத்து நேரிட்டது.
இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்ததாக நேற்று அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
மேலும் அங்கு சிக்கிக் கொண் டிருந்த சுமார் 106 நோயாளிகளை மீட்டு வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை மாநில முதல்வர் நவீன் பட்நாயக் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி னார். இதில் பலர் பலத்த காய மடைந்துள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
மேலும் மின் கசிவு காரணமாக இந்த விபத்து நேரிட்டிருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து உயர்நிலை விசாரணைக்கு உத்தர விடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தீ அதிகாரி, 2 பொறியாளர்கள் மற்றும் மேலா ளர் ஆகிய 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.