கிரேன் கம்பி அறுந்து 5 தொழிலாளர்கள் உயிரிழப்பு

கிரேன் கம்பி அறுந்து 5 தொழிலாளர்கள் உயிரிழப்பு

Published on

ஹைதராபாத்: தெலங்கானாவில் கிரேன் கம்பி அறுந்ததில் 5 தொழிலாளர்கள் கீழே விழுந்து உயிரிழந்தனர்.

தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள பாலமூரு பகுதியில் நீரேற்று பாசனத் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலையில் ராட்சத கிரேன் மூலம் பம்ப் ஹவுஸ் பகுதிக்குள் தொழிலாளர்கள் இறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது கிரேன் கம்பி திடீரென அறுந்ததில் 6 தொழிலாளர்கள் கீழே விழுந்தனர்.

இதில் 5 பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர். காயம் அடைந்தஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தத் தொழிலாளர்கள் அனைவரும் குஜராத்தை சேர்ந்தவர்கள். சம்பவம் தொடர்பாக கொல்லாபூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in