

ராம் கோபால் வர்மா என்றாலே எப்போதும் பரபரப்புதான். சில நாட்களுக்கு முன்பு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தைப் பற்றி ட்விட்டரில் ஒரு செய்தியை போஸ்ட் செய்து, ரஜினி ரசிகர்களிடம் வாங்கி கட்டிக் கொண்ட அவர், தற்போது தெலங் கானா முதலமைச்சர் கே.சந்திர சேகர ராவ் (கே.சி.ஆர்) பற்றி சில வார்தைகளை ட்வீட் செய்து சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
ஸ்ரீராமர், ஸ்ரீகிருஷ்ணரை விட கே.சி.ஆர். தான் ஸெக்ஸியாக இருப்பாரென்று தன்னிடம் பல பெண்கள் சொன்னதாக வர்மா ட்வீட் செய்தார்.
இதைப் பற்றி கேள்விப்பட்ட தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சித் தொண்டர்கள் கொதித்தெழு கின்றனர். ராம் கோபால் வர்மா ஒருவிதமான மன நோயாளி. சமீப காலமாக அவர் போஸ்ட் செய்கின்ற ட்வீட்ஸைப் பார்த்தாலே போதும், அவருடைய மனநிலைமை புரியும் என்று தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்தி உள்ளனர். இதைப்பற்றி கே.சி.ஆரோ, அல்லது அவருடைய குடும்பத்தினரோ எவ்வித கருத்துகளையும் வெளியிடவில்லை.