

பாஜகவின் பஞ்சாப் மாநில தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமரை நியமித்துள்ளார் அக்கட்சியின் தலைவர் அமித் ஷா.
மேலும், ஹரியாணா அமைச்சர் அபிமன்யூ இணைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் நடக்கவுள்ள மாநில தேர்தலுக்காக இந்த நியமனங்கள் நடந்துள்ளன.
சண்டிகரின் உள்ளாட்சித் தேர்தல் பொறுப்பாளராக பாஜகவின் தேசிய பொதுச்செயலர் சரோஜ் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார்.
சிரோமணி அகாலி தளத்துடன் கூட்டணி அமைத்து, பஞ்சாப்பை ஆண்டு வரும் பாஜகவுக்கு, இம்முறை காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் கடும் நெருக்கடியை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.