பிஹார் மதுவிலக்கு திருத்த சட்டத்தை ரத்து செய்தது ஐகோர்ட்

பிஹார் மதுவிலக்கு திருத்த சட்டத்தை ரத்து செய்தது ஐகோர்ட்
Updated on
1 min read

பிஹார் முழு மதுவிலக்குச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்தை பாட்னா உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

அதாவது, ஒரு வீட்டில் மதுபானம் இருந்தால், அந்த வீட்டில் உள்ள அனைத்து பெரியோர்களையும் கைது செய்யலாம் என்று சட்டத்திருத்தம் செய்யப்பட்டது.

பிஹார் அமைச்சரவையினால் அனுமதி அளிக்கப்பட்டு பிஹார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்த சட்டத்திருத்தத்தின்படி, மதுபானம் வைத்திருக்கும் எந்த ஒருவரையும் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உள்ளே தள்ளலாம்.

மேலும், வீட்டில் மதுபானம் வைத்திருந்தால் குடும்பத்தில் உள்ள அனைத்து பெரியோர்களையுன் கைது செய்து சிறையில் அடைக்கலாம் என்பதும் இந்தச் சட்டத் திருத்தத்தின் ஒருபகுதியாகும்.

ஏற்கெனவே இந்தச் சட்டத்தை அடக்குமுறை சட்டம் என்று பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், பாட்னா உயர் நீதிமன்றம் இந்த சட்டத்திருத்தத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்தத் தீர்ப்பை அடுத்து பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் கூறும்போது, “நான் உயிருடன் இருக்கும் வரை முழு மதுவிலக்கிலிருந்து பின் வாங்க மாட்டேன்” என்று கூறியுள்ளார்.

பாட்னா உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஐக்கிய ஜனதா தளத்தின் எம்.எல்.சி. நீரஜ் குமார் கூறும்போது, “இந்த விவகாரத்தில் சட்டத்தை நாங்கள் அணுக முடியும். முதலில் கோர்ட் உத்தரவை படித்துப் பார்த்து பிறகு முடிவெடுப்போம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in