வெளிநாட்டு பட்டாசு விற்பனை: மத்திய அரசு எச்சரிக்கை

வெளிநாட்டு பட்டாசு விற்பனை: மத்திய அரசு எச்சரிக்கை
Updated on
1 min read

தீபாவளி பண்டிகையையொட்டி, முன்கூட்டியே சீன பட்டாசுகள் சந்தையில் குவியத் துவங்கும் சாத்தியம் உள்ள நிலையில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வெளிநாட்டில் தயாரான பட்டாசுகளை இந்தியாவில் வைத் திருப்பது சட்டப்படி தண்டனைக் குரியது. இதுபோன்ற பட்டாசுகளை யாரேனும் வைத்திருந்தாலோ, விற்பனை செய்தாலோ, அருகில் உள்ள காவல் நிலையத்தில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்’ எனக் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் பட்டாசு தொழிலில் வர்த்தக அளவு, 6 ஆயிரம் கோடியை தாண்டிள்ளது. இதுவரை பட்டாசு இறக்குமதிக்கான உரிமம் யாருக்கும் வழங்கப்படவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in