தர்மராஜ ரசலம்
தர்மராஜ ரசலம்

மருத்துவ மாணவர் சேர்க்கையில் முறைகேடு - கேரள மாநில பேராயரிடம் விசாரணை

Published on

திருவனந்தபுரம்: மாணவர் சேர்க்கையில் அதிக அளவு பணம் பெறப்பட்டதாக எழுந்துள்ள புகாரில் அமலாக்கத்துறை அதிகாரிகள், கேரள பேராயர் தர்மராஜ ரசலத்திடம் விசாரணை நடத்தினர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் டாக்டர் சோமர்வெல் மெமோரியல் சிஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி உள்ளது. இந்நிலையில் இந்த மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையின்போது அதிக அளவில் பணம் பெறப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்த வழக்கை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த கல்லூரியின் நிர்வாகியாக செயல்பட்டு வரும் பேராயர் ஏ.தர்மராஜ ரசலம் நேற்று முன்தினம் திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து பிரிட்டன் செல்ல முயன்றபோது அவர் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். பின்னர் அவருக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சார்பில் சம்மன் வழங்கப்பட்டது.

இந்நிலையில் சம்மனை ஏற்றுக்கொண்ட தர்மராஜ ரசலம் நேற்று கொச்சியிலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு காலை 11 மணிக்கு ஆஜரானார். இதைத் தொடர்ந்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதிகாரிகள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பேராயர் தர்மராஜ ரசலம் பதில் அளித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in