

பாகிஸ்தான் பகுதிக்குள் அதிரடியாக நுழைந்து, இந்திய ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, சர்வதேச எல்லை முழுவதிலும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் உச்சபட்ச உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு, பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் சர்வதேச எல்லையை ஒட்டியுள்ள அனைத்து படைப் பிரிவுகளும் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு டெல்லியில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படை தலைமையகத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானை ஒட்டிய எல்லையில் பொதுமக்கள் நடமாட்டம் முற்றிலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோல், எல்லையை ஒட்டி அமைந்துள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்த, உள்ளூர் நிர்வாகத்துக்கு ஒத்துழைக்குமாறு எல்லைப் பாதுகாப்புப் படையினர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.