

சத்தீஸ்கரில் நக்ஸலைட்டுகளின் நாட்டு வெடிகுண்டு தாக்குதலில் சிக்கிப் பாதுகாப்பு வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.
சத்தீஸ்கரில் நக்ஸலைட்டுகளின் நாட்டு வெடிகுண்டு தாக்குதலில் சிக்கிப் பாதுகாப்பு வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.
சத்தீஸ்கரின், நாராயண்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட அகாபேடா கிராமத்தில் பொதுமக்கள் குறை கேட்பு முகாம் நேற்று நடைபெற இருந்தது. நாராயண்பூர் மாவட்ட ஆட்சியாளர், மாவட்ட எஸ்பி உள்ளிட்ட அதிகாரிகள் நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்தனர்.
முன்னதாக, பாதுகாப்பு நடவடிக்கையாக, நாராயண்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், மாவட்ட ரிசர்வ் படையைச் சேர்ந்த வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நேற்று காலை 8 மணியளவில், கரேல் பள்ளத்தாக்கு அருகே வீரர்கள் வந்தபோது, பதுங்கியிருந்த நக்ஸல்கள் நாட்டு வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்தினர். பின்னர், இரு தரப்புக்கும் இடையே சிறிது நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது.
இதில், மாவட்ட ரிசர்வ் படையைச் சேர்ந்த உதவி காவலர் புரன் போதாய் பலியானார். மேலும் 2 பேர் படுகாயமடைந்ததாக, போலீ ஸார் தெரிவித்தனர். தாக்குதல் நடத்திவிட்டு, தப்பியோடிய நக்ஸல்களுக்கு எதிராக தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சுக்மா மாவட்டத்தின் காதிராஸ் பகுதியில் படே சத்தி என்ற கிராமத்தின் அருகே வனப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினருக்கும், அங்கு பதுங்கி யிருந்த நக்ஸல்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சில மணி நேர துப்பாக்கிச் சண்டையில், கமாண்டர் அந்தஸ்திலான மாவோ யிஸ்ட் உட்பட 3 பெண் நக்ஸல்கள் கொல்லப்பட்டனர்.