

காஷ்மீர் யூரி தாக்குதலில் படுகாயமடைந்த மற்றொரு வீரர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்ததால், பலியான ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.
பலியான ராணுவ வீரர், புதுடெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
காஷ்மீரின் யூரி பகுதியில் பணி முடிந்து திரும்பிய ராணுவ வீரர்கள் தற்காலிக முகாம்களில் தங்கியிருந்தனர். செப்டம்பர் 18-ம் தேதி அதிகாலை அந்த முகாம்கள் மீது பயங்கர ஆயுதங்களோடு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 23 பேர் காயமடைந்தனர்.
செப்டம்பர் 28-ம் தேதி இரவு காஷ்மீர் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டருகே பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதியின் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் அப்பகுதியில் இருந்த தீவிரவாதி முகாம்கள் அழிக்கப்பட்டது யூரி தாக்குதலுக்கான பதிலடியாகக் கருதப்படுகிறது.