உத்தரப் பிரதேசம் | பூர்வாஞ்சல் விரைவுச் சாலையில் விபத்து: 8 பேர் பலி; காயம் 20

உத்தரப் பிரதேசம் | பூர்வாஞ்சல் விரைவுச் சாலையில் விபத்து: 8 பேர் பலி; காயம் 20
Updated on
1 min read

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் பூர்வாஞ்சல் விரைவுச் சாலையில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் 8 பேர் பலியாகினர். 20 பேர் காயமடைந்தனர். இவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் லக்னோ விபத்து சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

லக்னோவில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாராபங்கி மாவட்டத்தில் தான் இந்த விபத்து நடந்துள்ளது. விபத்துக்குள்ளான இரண்டு பேருந்துகளும் பிஹாரில் இருந்து டெல்லி சென்று கொண்டிருந்தவையாகும். பேருந்துகள் நரேந்தர்பூ மாத்ரஹா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து நடந்தது. இரண்டு பேருந்துகளுமே டபுள் டெக்கர் எனப்படும் இரண்டடுக்கு கொண்ட பேருந்துகளாகும்.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 8 பேர் பலியாகினர். காயமடைந்தவர்கள் ஹைதர்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in