சோனியா காந்தி குறித்து அவதூறு கருத்து: பாஜகவுக்கு காங்கிரஸ் கண்டனம்

சோனியா காந்தி குறித்து அவதூறு கருத்து: பாஜகவுக்கு காங்கிரஸ் கண்டனம்
Updated on
1 min read

புதுடெல்லி: சோனியா காந்தி குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் அவதூறாக பேசியதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற பாஜக செய்தித் தொடர் பாளர் பிரேம் சுக்லா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தொலைக்காட்சி விவாதத்தில் பிரேம் சுக்லா, சோனியா காந்தி குறித்து அவதூறான கருத்துகளை கூறியுள்ளார். பாஜக தலைவர்கள் தொடர்ந்து இதுபோன்ற அநாக ரிக செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பெண்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று நமது புராணங்கள் கற்றுத் தந்துள்ளன. ஆனால் பாஜக தலைவர்கள் தரம்தாழ்ந்த அரசியலில் ஈடுபட்டு நாட்டின் பெண்களுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். பாஜகவின் பெண்கள் எதிர்ப்பு முகம் அம்பலமாகி உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் நட்டா மன்னிப்பு கோர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in