பெங்களூரு மாநகராட்சி மேயராக காங்கிரஸை சேர்ந்த பத்மாவதி தேர்வு

பெங்களூரு மாநகராட்சி மேயராக காங்கிரஸை சேர்ந்த பத்மாவதி தேர்வு
Updated on
1 min read

பெங்களூரு மாநகராட்சியின் புதிய மேயராக காங்கிரஸைச் சேர்ந்த பத்மாவதியும், துணை மேயராக மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் ஆனந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

பெங்களூரு மாநகராட்சி மேயர், துணை மேயர், 12 நிலைக் குழுக்களின் உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் பாஜகவை வீழ்த்தி, மீண்டும் மாநகராட்சியை கைப்பற்ற காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகள் கூட்டணி அமைத்தன.

இம்முறை மேயர் பதவி பிற் படுத்தப்பட்டோர் (பெண்) பிரிவுக் கும், துணைமேயர் பதவி பொது (ஆண்) பிரிவுக்கும் ஒதுக்கப் பட்டுள்ளன. எனவே காங்கிரஸ் சார்பாக பத்மாவதி (பிரகாஷ் நகர் வார்டு), பாஜக சார்பாக‌ சவுமியா சிவக்குமாரும் (சாந்தி நகர் வார்டு) போட்டியிட்டனர்.

198 இடங்களைக் கொண்ட பெங்களூரு மாநகராட்சியில் பாஜகவுக்கு 100, காங்கிரஸூக்கு 76, மஜதவுக்கு 14, சுயேச்சைகளுக்கு 8 இடங்கள் உள்ளன. இது தவிர, பெங்களூரைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் கள், சட்டப்பேரவை மற்றும் சட்ட மேலவை உறுப்பினர்கள் 71 பேரை யும் சேர்த்து மொத்தமாக 269 பேர் இந்த தேர்தலில் வாக்களித்தனர்.

இதில் பத்மாவதி 142 வாக்கு களைப் பெற்று பெங்களூரு மேயராக தேர்வு செய்யப்பட்டார். துணை மேயராக மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த ஆனந்த் வெற்றி பெற்றார். பத்மாவதி பிரகாஷ் நகர் வார்டில் தொடர்ந்து நான்கு முறை வெற்றி பெற்றவர். இவரது மூதாதையர் தமிழகத்தில் இருந்து பெங்களூரில் குடியேறியவர்கள் என கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in