கேரளாவில் அமைவது மக்களின் அரசாக இருக்கும்: முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பினராயி விஜயன் உறுதி

கேரளாவில் அமைவது மக்களின் அரசாக இருக்கும்: முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பினராயி விஜயன் உறுதி
Updated on
1 min read

கேரளாவில் அமையவுள்ள இடது சாரி ஜனநாயக முன்னணி அரசு, மக்களின் அரசாக இருக்கும். ஜாதி, மதம், அரசியல் மாறுபாடுகளைக் கடந்து செயல்படும் என முதல்வராக பொறுப்பேற்கவுள்ள பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு ஆட்சியமைக்க உள்ளது. அதன் முதல்வராக பினராயி விஜயன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து முதல்முறையாக பினராயி விஜயன் செய்தியாளர் களை நேற்று சந்தித்தார். அவர் கூறியதாவது:

ஒவ்வொருவருக்கும் இந்த அரசாங்கத்தில் உரிமை உள்ளது. மக்கள் தங்கள் பொறுப்பைத் துறந்துவிட்டால் ஜனநாயக நடை முறை முழுமையடையாது என்பதை சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். மக்களின் ஒத்துழைப்பு தான் ஜனநாயகத்தை வலுப்படுத் தும். நீதி, சகோதரத்துவம், வளம், வளர்ச்சியை நோக்கி அரசு செயல்படும்.

தேர்தல் முடிந்து விட்டது. பல்வேறு உறுப்பினர்கள் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளனர். யாருக்கு பெரும்பான்மை கிடைத்ததோ, அவர்கள் ஆட்சியமைக்கிறார்கள். மாநிலத்தின் நலனுக்காக, அனை வருமே சேர்ந்து பணியாற்ற வேண் டும். அனைத்துப் பகுதி மக்களின் ஒத்துழைப்பையும் எதிர்பார்க் கிறேன்.

பல்வேறு நிலைகளில் ஊழல் உள்ளது. சிலர், நாங்கள் முதல்வ ருக்கு வேண்டியவர்கள் எனக் கூறிக் கொண்டிருப்பதாக தெரி கிறது. அவர்களுக்கு நான் பணி யாற்றும் விதம் தெரியாது. அந்த மாதிரியான நபர்கள் தொலைவில் வைக்கப்பட வேண்டியவர்கள். நாம் கவனமாக இருக்க வேண்டும்.

சொந்தப் பணியாளர்களும் அமைச்சர்கள் போலத்தான். ஊழலுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இன்று பதவியேற்பு

இன்று மாலை 4 மணிக்கு புதிய அரசு பதவியேற்கிறது. மாலை 6.30 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. அமைச்சர்கள் பட்டியல் இன்னும் தயாராக வில்லை. இன்று காலை ஆளு நரைச் சந்தித்த பிறகு பட்டியல் இறுதி செய்யப்படும் என விஜயன் தெரிவித்துள்ளார்.

பிறந்தநாள் விழா

பினராயி விஜயன் நேற்று தனது பிறந்தநாளை செய்தியாளர்கள் மத்தியில் கொண்டாடினார். செய்தி யாளர்கள் சந்திப்பின்போது, லட்டு வழங்கப்பட்டது. வழக்கத்துக்கு மாறாக மலர்ந்த முகத்துடன் காணப்பட்ட அவர், ரகசியமாக வைத்திருந்தேன். இன்று எனக்கு பிறந்தநாள் என அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in