மாணவனை சுட்டுக் கொன்றவரின் தாயார் பிஹார் ஐஜத எம்எல்சி.யின் சொத்துகளை முடக்க உத்தரவு

மாணவனை சுட்டுக் கொன்றவரின் தாயார் பிஹார் ஐஜத எம்எல்சி.யின் சொத்துகளை முடக்க உத்தரவு

Published on

பிஹார் மாநில ஆளும் கட்சி சட்ட மேலவை உறுப்பினர் மனோரமா சொத்துகளை முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

பிஹாரின் கயாவில் வசித்து வருபவர் மனோரமா ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் சட்டமேலவை உறுப்பினராக உள்ளார். இவரது மகன் ராக்கி கடந்த 7-ம் தேதி காரை முந்திச் சென்ற பிளஸ் 2 மாணவன் சச்தேவாவை (19) துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இவ்வழக்கில் ராக்கியும் அவரது தந்தை பிந்தி யாதவும் கைதாகினர். முன்னதாக தலைமறைவான ராக்கியை தேடி மனோரமாவின் வீட்டில் போலீஸார் சோதனையிட்ட போது மாநிலத்தின் பூரண மதுவிலக்குக்கு எதிராக 6 மது பாட்டில்கள் பதுக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து ராக்கி, அவரது தந்தை பிந்தி யாதவ் மற்றும் தாய் மனோரமா மீது மதுபாட்டில்களை பதுக்கியதாக கலால் துறையினர் மற்றொரு வழக்கு பதிவு செய்தனர்.

வீட்டுக்கு ‘சீல்’

இதையடுத்து கைது நடவடிக் கைக்கு பயந்து மனோரமா தலை மறைவானார். இதன் காரண மாக அவரது வீட்டுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

இந்நிலையில் மனோரமாவின் சொத்துகளை முடக்க உத்தர விடக் கோரி கயா மாவட்ட கூடுதல் முதன்மை நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.ஜா முன்னிலையில் போலீஸார் தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி எஸ்.கே.ஜா மனோரமாவின் சொத்துகளை முடக்க உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் கயாவின் அனுக்கிரஹ புரி காலனியில் உள்ள மனோரமாவின் வீடு, ரயில்வே நிலையம் மற்றும் புத்த கயாவில் உள்ள பிந்தியாதவுக்கு சொந்த மான தொழிற்சாலை ஆகிய 3 இடங்களில் நீதிமன்ற உத்தரவின் நகல் நேற்று ஒட்டப்பட்டது.

இதற்கிடையில் தலைமறை வாக உள்ள மனோரமா முன்ஜாமீன் கோரி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். வரும் திங்கள் கிழமை நீதிபதி எஸ்.என்.சிங் முன்னி லையில் இந்த மனு விசாரணைக்கு வருகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in