Last Updated : 22 May, 2016 12:11 PM

 

Published : 22 May 2016 12:11 PM
Last Updated : 22 May 2016 12:11 PM

நாட்டைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது: மத்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்

நாட்டைப் பாதுகாப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்த வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

சர்வதேச புத்த பூர்ணிமா தினத்தை முன்னிட்டு டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் ராஜ்நாத் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாட்டைப் பாதுகாப்பதற்கு என்னென்ன நடவடிக்கைகள் தேவையோ அதை எல்லாம் மத்திய அரசு எடுத்து வருகிறது. நாட்டு மக்கள் அனைவருக்கும் நம்பிக்கை உணர்வு இருப்பதாக உணர்கிறேன். அனைத்து சாதி, மதங்களைச் சேர்ந்த மக்களுக்கும் தீவிரவாத அமைப்புகளை எதிர்த்துப் போராடக்கூடிய வலிமை இருக்கிறது.

சமீப காலமாக தனி நபர்கள், சமூகங்கள் மற்றும் மதத்தினருக்கிடையிலான சச்சரவுகள் அதிகரித்து வருகிறது. இவற்றுக்கெல்லாம் தீர்வு, புத்தரின் போதனையில் அடங்கி உள்ளது. மேலும் தீவிரவாதத்துக்கும் அதில் தீர்வு சொல்லப்பட்டுள்ளது. அகிம் சையின் மீது நாம் அனைவரும் நம்பிக்கை வைக்கத் தொடங்கி னால் இதுபோன்ற சம்பவங்கள் குறைந்துவிடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜுவும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் அவர் கூறும்போது, “நாட்டில் தீவி ரவாத அமைப்புகள் கால் பதித்து வருவதாக பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஐஎஸ் உள்ளிட்ட தீவிரவாத அமைப்பு களின் இத்தகைய பிரச்சாரம் பொதுமக்கள் மத்தியில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அத்துடன் தீவிரவாத அமைப்பு கள் இந்தியாவில் வேரூன்றுவதை மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x