Last Updated : 24 May, 2016 10:33 AM

 

Published : 24 May 2016 10:33 AM
Last Updated : 24 May 2016 10:33 AM

அரசு விளம்பரங்கள் குறித்தும் தாண்டன் குழு ஆராயும்: மத்திய அரசு அதிகாரிகள் தகவல்

மாநில அரசுகள் அளவுக்கு மீறி விளம்பரம் செய்வது குறித்தும் பி.பி. தாண்டன் குழு ஆராயும் என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசு விளம்பரங்களின் உள் ள டக்கத்தை ஒழுங்குபடுத்துவது தொடர்பான பரிந்துரைகளை அளிக்க முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் தாண்டன் தலைமையில் 3 உறுப்பினர் குழுவை மத்திய தகவல் ஒலிப ரப்பு அமைச்சகம் கடந்த மாதம் அமைத்தது. மூத்த பத்திரிகை யாளர் ரஜத் ஷர்மா, விளம்பரத் தொழில் நிபுணர் பியூஷ் பாண்டே ஆகியோர் இக்குழுவில் உறுப்பி னர்களாக உள்ளனர்.

இந்நிலையில் டெல்லியில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி, மாநில அரசுகள் அளவுக்கு மீறியும், தங்களுக்கு வேண்டிய பத்திரிகைகள் மற்றும் சேனல்களுக்கு மட்டும் விளம்ப ரம் தருவது குறித்தும் கவலை தெரிவித்தார். இது ஒருவகையில் அரசியல் லஞ்சம் ஆகாதா என்றும் அவர் வியப்பு தெரிவித்தார்.

டெல்லியில் விளம்பரங் களுக்கு ஆம் ஆத்மி அரசு அளவுக்கு அதிகமாக செலவிட்டு வருவதாக பாஜக குற்றம்சாட்டி வரும் நிலையில், எந்தவொரு கட்சியின் பெயரையும் குறிப்பிடா மல் ஜேட்லி இவ்வாறு பேசினார்.

இந்நிலையில் தகவல் ஒலி பரப்பு அமைச்சக அதிகாரிகள் நேற்று கூறும்போது, “மாநில அரசு களின் அளவுக்கு மீறிய மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊடகங் களுக்கு மட்டும் விளம்பரம் தரப் படும் விவகாரம் குறித்தும் தாண் டன் குழு ஆராயும்” என்றனர்.

அதிகாரிகள் மேலும் கூறும் போ து, “புதிய சேனல் தொடங்க அனு மதிக்குமாறு டெல்லி சபா நாயகர் மற்றும் தமிழக அரசிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள் ளன. இது தொடர்பாக தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணை யத்தின் (ட்ராய்) பரிந்துரைகளை எங்கள் அமைச்சகம் ஆராயும். மாநில அர சுகள் தகவல் ஒலிபரப் பில் ஈடுபட அனுமதிப்பதற்கு ட்ராய் பரிந்துரை கள் சாதகமாக இல்லை” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x