டெல்லியில் முக்கிய தீவிரவாதி கைது: விமான நிலையத்தில் சுற்றிவளைப்பு

டெல்லியில் முக்கிய தீவிரவாதி கைது: விமான நிலையத்தில் சுற்றிவளைப்பு
Updated on
1 min read

இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த முக்கிய தீவிரவாதியை தேசிய புலனாய்வுப் பிரிவினர் டெல்லி விமான நிலை யத்தில் நேற்று கைது செய்தனர்.

கர்நாடக மாநிலம், பட்கல் பகுதியைச் சேர்ந்த அப்துல் வாஹித் சித்திபாபா (32), இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பின் பொருளாதார மூளையாக கருதப்படுபவர். தற்போது சிறையில் உள்ள யாசின் பட்கலின் நெருங்கிய உறவினர்.

இந்தியாவில் பல்வேறு இடங் களில் நடந்த தாக்குதல்களுக்கு துபாயில் இருந்தபடி சதித் திட்டங் களை தீட்டி, நிதிப் பரிவர்த்தனை களையும் மேற்கொண்டதாக இவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.

கடந்த, 2006 மும்பை தொடர் குண்டுவெடிப்பு, 2008-ம் ஆண்டு டெல்லி தொடர் குண்டுவெடிப்பு, 2010 பெங்களூரு சின்னசாமி விளையாட்டு அரங்க தாக்குதல் ஆகிய வழக்குகளில் இவர் தேடப்பட்டு வந்தார்.

கடந்த 2008-ம் ஆண்டில் இந்தி யன் முஜாகிதீனுக்கு எதிரான நடவடிக்கை தீவிரமடைந்த பின், இந்தியாவில் இருந்து துபாய்க்கு பறந்த சித்திபாபாவுக்கு எதிராக சர்வதேச அளவிலான ‘ரெட் கார்னர் நோட்டீஸ்’ பிறப்பிக்கப் பட்டிருந்தது.

பல்வேறு வழக்குகள் தொ டர்பாக கைது வாரண்ட்டும் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தியாவுக்கும், ஐக்கிய அரபு அமிரகத்துக்கும் இடையே கையெ ழுத்தான குற்றவாளிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில், சித் திபாபா துபாயில் இருந்து இந்தி யாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

இதைத்தொடர்ந்து, டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று வந்திறங்கிய சித்திபாபாவை, தேசிய புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர்.

இதற்கிடையே டெல்லியில் நேற்று நடைபெற்ற எல்லைப் பாது காப்புப் படையினர் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங்கிடம் இந்த கைது நடவடிக்கை குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது, குறிப்பிடத்தக்க தகவல் எதையும் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in