Published : 20 May 2016 10:17 AM
Last Updated : 20 May 2016 10:17 AM

கணக்கை தொடங்கியது பாஜக: முன்னாள் அமைச்சர் ஓ.ராஜகோபால் வெற்றி

மாநில தலைவர் கும்மணம் ராஜசேகரன், ஸ்ரீசாந்த் தோல்வி



கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாக பாஜக ஒரு இடத்தில் வெற்றி பெற்று கணக்கைத் தொடங்கி உள்ளது. எனினும் பாஜக மாநில தலைவர் கும்மணம் ராஜசேகரன், கிரிக்கெட் வீரர் சாந்த உள்ளிட்டோர் தோல்வி அடைந்தனர்.

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவரை பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெற்றதில்லை. இந்த தேர்தலில் ஈழவா மக்கள் கட்சியுடன் பாஜக கூட்டணி வைத்து போட்டியிட்டது.

திருவனந்தபுரத்தில் உள்ள நேமம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஓ.ராஜகோபால் (86) வெற்றி பெற்றுள்ளார். இவர் இந்தத் தொகுதி யின் இப்போதைய எம்எல்ஏவான மார்க்சிஸ்ட் வேட்பாளர் வி.சிவன் குட்டியை 8,671 வாக்குகள் வித்தியாசத் தில் தோற்கடித்தார். இதன்மூலம் கேரள சட்டப்பேரவைக்குள் நுழையும் முதல் பாஜக எம்எல்ஏ என்ற சாதனையை படைத்துள்ளார்.

கடந்த 1999, 2004-ல் நடந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் ராஜகோபால் போட்டியிட்டு தோற்றார். கடந்த 2014 தேர்தலில் போட்டியிட்ட இவர், காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூரிடம் தோல்வி அடைந்தார். எனினும், 2-வது இடம் பிடித்தார். அதேபோல் கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நேமம் தொகுதியில் போட்டியிட்டு 2-வது இடத்தைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக மாநில தலைவர் கும்மணம் ராஜசேகரன், முன்னாள் மாநில தலைவர் வி.முரளீதரன், பாஜகவில் சேர்ந்த கிரிக்கெட் வீரர் சாந்த் ஆகியோர் தோல்வியைத் தழுவியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x