Published : 03 Jun 2014 11:05 AM
Last Updated : 03 Jun 2014 11:05 AM

முன்னாள் மத்திய அமைச்சர் தபன் மறைவு

மேற்கு வங்க பாஜக தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான தபன் சிக்தர், டெல்லியில் திங்கள் கிழமை காலை மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

71 வயதாகும் தபன் சிக்தர் திருமணம் ஆகாதவர். சிறுநீரகங் கள் செயலிழப்பு காரணமாக கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த மே 29-ம் தேதி விமானம் மூலம் டெல்லி கொண்டுவரப்பட்டு, எய்மஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிறந்த பேச்சாளரும், 1990-களில் இருந்து மேற்கு வங்கத்தில் பாஜக வளர்ச்சிக்கு பாடுபட்டு வந்தவருமான தபன் சிக்தர், 1998-ல் டம் டம் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றார். இதன் மூலம் மேற்கு வங்கத்தில் பாஜகவின் முதல் எம்.பி. என்ற பெருமையை பெற்றார். தொடர்ந்து 1999 மக்களவைத் தேர்தலிலும் வென்ற தபன் சிக்தர், வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் 1999 முதல் 2004 வரை இடம்பெற்றார்.

பிரதமர் இரங்கல்

பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கல் செய்தியில், “தபன் சிக்தர்ஜியின் மரணம் மிகுந்த வருத்தம் அளிக்கிறது. அவரது ஆன்மா அமைதி பெறட்டும். பாஜகவை கட்டமைப்பதில் அவரது மிகப்பெரிய பங்களிப்புக்காகவும் நீண்ட பொது வாழ்வுக்காகவும் அவர் என்றென்றும் நினைவு கூரப்படுவார்” என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x