உறவினர்களுக்கு வேலைவாய்ப்பு: அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கிறார் அமைச்சர்

உறவினர்களுக்கு வேலைவாய்ப்பு: அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கிறார் அமைச்சர்

Published on

விமானப் போக்குவரத்துத் துறை யின் பல்வேறு பிரிவுகளில் பணி புரியும் அதிகாரிகளின் உறவினர் கள், இத்துறை சார்ந்த பல்வேறு அமைப்புகளில் பணிபுரிவதாக தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து அதுகுறித்த விவரங் களை உடனடியாக அளிக்குமாறு விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு துறை அதிகாரிகளுக்கு உத்தர விட்டுள்ளார்.

விமானப் போக்குவரத்துத் துறை தலைமை இயக்குநரகம், விமானப் போக்குவரத்துத் துறை பாதுகாப்பு அமைப்பு, ஏர் இந்தியா, விமானப் போக்குவரத்து ஆணையகம், பவான் ஹன்ஸ் ஹெலிகாப்டர் நிறுவனம், விமான நிலைய பொருளாதார ஒழுங்கு முறை ஆணையம், இந்திரகாந்தி ராஷ்ட்ரீய உதான் அகாடமி ஆகிய துறையின் தலைவர்கள், அத்துறையில் பணிபுரியும் உறவினர்கள் விமானப் போக்கு வரத்துத் துறை சார்ந்த பணிகளில் பணிபுரிகின்றனரா என்பது குறித்த விவரங்களை அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்விஷயத்தில் விதிமுறை கள் மீறப்பட்டிருந்தால் கடுமை யான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

சில அதிகாரிகளின் உறவினர் கள் அமைச்சகம் மற்றும் துணை அலுவலகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறை சார்ந்த பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவதை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு கவனித்துள்ளார். அவர்கள் உரிய அனுமதி பெறாமல் விதிமுறைகளை மீறி பணியமர்த்தப்பட்டுள்ளது தெரிய வந்தது. இதையடுத்தே இந்நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உரிய வழிகாட்டு நெறிமுறை களைப் பின்பற்றுமாறு அமைச்ச கத்தின் கீழுள்ள அனைத்துத் துறை களுக்கும் அமைச்சர் உத்தரவிட் டுள்ளார்.

விமான நிறுவனம் உள்பட்ட பல்வேறு தனியார் நிறுவனங்களில் விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகளின் உறவினர்கள் பணிபுரிகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in