

நாடாளுமன்ற மக்களவை நேற்று கூடியதும், அதிமுக எம்பி ஜி.ஹரி புல்லட் ரயில் சேவை தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்கு ரயில்வே இணையமைச்சர் மனோஜ் சின்ஹா எழுத்துப்பூர்வமாக பதில் அளித்து கூறியதாவது:
மும்பை அகமதாபாத் இடையே 508 கி.மீ தொலைவுக்கு புல்லட் ரயில் சேவை தொடங்கப்பட வுள்ளது. புல்லட் ரயிலுக்கான கட்டணம் 1.5 மடங்கு அதிகமாக இருக்கும்.
அடுத்ததாக சீனாவின் ஒத் துழைப்புடன் சென்னை டெல்லி இடையே புல்லட் ரயில் சேவை தொடங்கும் திட்டத்தின் ஒரு பகுதி யாக டெல்லி நாக்பூர் இடையே ஆக்கப்பூர்வமான ஆய்வு பணிகள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள் ளது. புல்லட் ரயில் சேவை தொடங் கப்பட்டால் முதல் கட்டமாக 350 கி.மீ வேகத்தில் இயக்கப்படும். இவ் வாறு அவர் கூறினார்.